search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் மந்திரி ரியோ"

    நாகலாந்து மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி ரியோவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார். #NagalandFlood
    கொஹிமா:

    இந்தியா முழுவதும் இந்த ஆண்டு பருவமழை நன்கு பெய்து வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது.  

    கடந்த ஒரு மாதமாக நாகலாந்தில் பெய்து வரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரை ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பிற்கு, 12 பேர் உயிரிழந்துள்ளனர். 800 கோடி ரூபாய் அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மத்திய அரசிடம் இருந்து 100 கோடி ரூபாய் நிதியுதவி வேண்டி நாகலாந்து முதல் மந்திரி நெய்பு ரியோ கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில், நாகலாந்து மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி ரியோவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், நாகலாந்தில் பெய்து வரும் கனமழை பாதிப்பு குறித்து முதல் மந்திரியிடம் கேட்டறிந்தேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகலாந்து மக்களுக்கு தோளோடு தோள் நிற்போம்.  மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என பதிவிட்டுள்ளார். #NagalandFlood
    ×